Tuesday 7th of May 2024 02:13:55 PM GMT

LANGUAGE - TAMIL
-
திருமணங்களில் அதிகபட்சமாக 100 போ் வரை பங்கேற்க அனுமதி!

திருமணங்களில் அதிகபட்சமாக 100 போ் வரை பங்கேற்க அனுமதி!


திருமண நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னா் திருமண நிகழ்வுகளில் 25 போ் மட்டுமே ஒன்றுகூடலாம் என்ற அறிவிப்பு தளா்த்தப்பட்டு புதிய வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் திருமண மண்டபங்களில் கூடுவோா் எண்ணிக்கை அங்குள்ள மொத்த இருக்கை வசதிகளில் 40 வீதத்துக்கும் குறைவானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமணங்களில் விருந்தினர்களை முடிந்தவரை குறைவாக அழைக்கவும். இதனால் திருமணத்தில் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தவும் அவா்களின் தொடா்புத் தடங்களை கண்டறியவும் எளிதாக இருக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளா் டாக்டா் லக்ஸ்மன் கம்லத் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்தாா்.

புதிய வழிகாட்டுதலின் கீழ் 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கூடுவதற்குக் கண்டிப்பான தடை இருக்கும். அத்துடன் திருமணத்தில் கூடுவோா் நபா்களுக்கிடையில் கண்டிப்பாக ஒரு மீட்டர் இடைவெளியைப் பேண வேண்டும். அத்துடன் மணமக்கள் உட்பட அனைவரும் முக கவசங்களை அணிய வேண்டும் எனவும் புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டிப்பிடிப்பதும், கைகொடுப்பதும் தவிா்க்கப்பட்டு தொடுகையற்ற வரவேற்புக்களைப் பேண வேண்டும். அத்துடன் குழு புகைப்படங்கள் எடுப்பதை தவிா்க்க வேண்டும் எனவும் புதிய வழிகாட்டலில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE